மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் சாட்சிய சட்டம் உள்ளிட்டவைகளை இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்வதை சட்டமாக்க உள்ளதாக தெரிவித்து இதனை உடனடியாக கைவிட வலியுறுத்தி தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் காளிதாஸ் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வன் ,ரமேஷ், கோசா.சரவணன், பூவையார் ஆறுமுகம், ஜியாவுதீன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக