பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் வைத்து பாராளுமன்ற தேர்தல் மாதிரி செயல் முறை விளக்கம்...
நெலாக்கோட்டை அடுத்துள்ள பாட்டவயல் ள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வைத்து பாராளுமன்ற தேர்தல் மாதிரி செயல்முறை விளக்கம் தூரிகை அறக்கட்டளையும் பள்ளிக்கூட நிர்வாகவும் இனைந்து நடத்தப்பட்டது .இந்த பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு 274 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
இன்னிலையில் படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது ஆட்சி யாளர்கள் என்ன வாக்குறுதி தருகின்றனர் மக்களின் நிலைபாடு என்ன என்பதை பற்றியும் .தேர்தலில் எப்படி நாம் வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்து கூறப்பட்டதோடு செயல் முறை செய்துகாட்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தலில் போட்டியிட மதலமைச்சர் பதவிக்கு நான்கு பேர்.சுகாதார அமைச்சர் பதினெழு பேர்.கல்வி அமைச்சர் ஏழு பேர் கலாச்சார அமைச்சர் நான்கு பேர். விளையாட்டு அமைச்சர் ஐந்து பேர் என போட்டி போடுகின்றனர். இதில் தங்கள் துரை சார்ந்தவர்கர்கள் ஐந்து அமைச்சர்களும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்..
இந்த தேர்தலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பூபதி தேர்தல் மண்டல அலுவலர் . வாக்கு பதிவாளர் ரஜினிபாஸ்கர் .ஷீபா சகுந்தலா வாக்குசாவடி நிலை அலுவளர்.மாணவர்கள் வாக்காளராகவும் இருந்தனர்.
வாக்கு9/8/23 அனறு துவக்கப்பட்டது .வாக்கு எண்ணிக்கை 10/8/23.அன்று நடைபெறும்.தேர்தல் முடிவு 11/8/23.நடைபெரும்.தெரிவிக்கப்பட்டது..நிகழ்ச்சியில் தூரிகை அறக்கட்டளை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நோட்டுகள் கல்விக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது...
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பூபதி.பெற்றோர் சங்க தலைவர்.புருசோத்தமன். கல்வி வளர்ச்சி குழு இந்திரா காந்தி மற்றும் கவுன்சிலர் அஸ்ரப் அனீஸ்.மாலதி மரியம் கோவிந்தராஜ் ஆனந்குமார்.சுகன்யா ரெமா.அஸவதி பள்ளி மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக