காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக Meri Metti Mera Desh திட்டத்தின்படி அரியக்குடி கிராமத்தில் மரம் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரியக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பையா தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர்.
கிராம மக்களுக்கு மரங்களின் பயனைக் கூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவ, மாணவிகள் ஏற்படுத்தினர். இந்நிகழ்வை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக