நீலகிரி மாவட்டம் பந்தலூர். சேரங்கோடு பஞ்சாயத்தில் வைத்து வார்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூர். சேரங்கோடு பஞ்சாயத்தில் வைத்து வார்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...


 நீலகிரி மாவட்டம்  பந்தலூர். சேரங்கோடு பஞ்சாயத்தில் வைத்து வார்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவி லில்லி ஏழியாஸ் தலைமையேற்றார் .கூட்டத்தில் துனை தலைவர் சந்திரபோஸ். வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ்.பஞ்சாயத்து செயல் அலுவலர்  சஜீத் .சேரம்பாடி மின்சார உதவி அலுவலர் பாலு .வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர் .


கூட்டம் துவக்கத்திலேயே சலசலப்பு இருந்த நிலையில்  துனை தலைவர் மின்சார அலுவலர் பாலுவிடம் கேட்ட போது  பைகாரா மின்நிலையத்தில் தொடர்ந்து பழது பார்க்கும் பணியால் மின் துன்டிப்பு வருகிறது என்றார் தெருவிளக்கு அடிக்கடி பழதாகிறது ஏன் என துனை கேட்டார் அதற்கு மின்னழந்த காரணம் என்றார் பாலு.


மேலும் கருத்தாடு அம்மன்காவு.கோட்டப்பாடிஅய்யன்கொல்லி போன்ற பகுதியில் மின்சார வயர்கள் தாழ்வாக உள்ளது இது மின்சார துறையினர் கண்டு கொள்வதில்லை என கோபால்  கூறினார் .மேலும் எனது வார்டில் நான்கு பேரை யானை தாக்கி கொன்றது காரணம் தெரு விளக்கு இல்லாத காரணம் நான் மன்ற கூட்டத்தில் கூறி மூன்று மாதங்களாச்சி என ஆதங்கத்தோடு கூறினார்.


மேலும் வனத்துறை கொடுத்த பல்பு என்னாச்சு என கேட்டார் அதற்கு பஞ்சாயத்து தலைவி கூறுகையில் தொடர்ந்து பல இடங்களில் மின்னலுத்தத்தால் பல்பு  எரிவதில்லை எனவும் வெகு விரைவில் வேறு தரமுல்ல கம்பனி பல்புகள் வாங்கப்படும் கிராம பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்படும் என கூறினார்.


இன்னிலையில் மன்ற கூட்டத்திற்கு பஞ்சாயத்து செயல் அலுவலர் சேரம்பாடியில்  உள்ள காவல்துறையில் வழக்கு சம்மந்தமாக சென்றிருந்த காரணத்தால் அவர் வர தாமதமானதால்  மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad