மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை:

சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை:

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மிகவும் ஆபத்தான நிலையில்  முழுதும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மாணவிகள் மத்தியில் உள்ளது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளியின் வாசல் அருகிலேயே உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளிக்கு வரும்  மாணவிகள்  ஆசிரியர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக ,
காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு வரும் போதும் பள்ளியிலிருந்து வெளியேறி செல்லும்போது ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள்  கூட்டமாக வருவதால்  மின்கம்பத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad