தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் - தனியார் பள்ளி முன்பு பொதுமக்கள் சாலை மறியல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் - தனியார் பள்ளி முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள மறவன் மடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்ல முன்பகுதியில் சாலை வசதி இல்லை. ஏற்கனவே இருக்கும் ஒரே பாதையையும் பயன்படுத்த மேற்படி பள்ளி நிர்வாகம் தடை செய்து விட்டது.


இதன் காரணமாக தனியார் பள்ளிக்கு பின் புறம் உள்ள தனியார் நிலம் வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது என்று, மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை மேற்படி பள்ளி முன்பு திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை காவல் துறையினர் அவ்விடத்திற்கு வந்து பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதை எடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


பள்ளியின் புதிய முதல்வரின் பிடிவாதத்தினால் தான் இந்த பிரச்சனை என்று பெற்றோர்கள் மத்தியில் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது பரப்பு நிலவியது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad