திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவு வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தான்டப்பட்டியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவு வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 11 கேட்டகிரியை மட்டும் தனியாக பிரித்து அவர்களுக்கு மட்டும் அரசு ஊதியமும் மற்றவர்களுக்கு வெஜ் போர்ட் ரெக்கமண்டேஷன் ஊதியம் வழங்கும் இரட்டை ஊதிய முறை கைவிட கோரியும்,
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக வழங்கி வரும் இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரியும்,
இரட்டை ஊதிய முறையை ஒழிக்குமாறு சென்னை தொழில் தீர்ப்பாயம் கடந்த 2002இல் வழங்கிய தீர்ப்பை சர்க்கரைத்துறை ஆணையம் உடனடியாக அமல்படுத்த கோரியும்,
இரட்டை ஊதிய முறையை ஒழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் 2015ல் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்தும் சர்க்கரை ஆலை ஆணையத்தை கண்டித்தும்
காமன் கேடர் அலுவலர்களின் வழக்குகள் 32டிடி/2003 இல் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு மட்டும் சர்க்கரை துறை ஆணையமும் நிர்வாகமும் மேல்முறையீடு செய்யாமல் சம்பள உயர்வு அளிப்பது ஏன்?
கடந்த 12 வருடங்களாக ஊதிய பேச்சு வார்த்தை முடிவு செய்யாமல் தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் காமன் கேடர் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு ஊதியம் வழங்க சர்க்கரை துறை ஓர் குழுவை அமைத்தது ஏன் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய பரிந்துரை அரசுக்கு செய்ய அமைக்கப்பட்ட குழு இது நாள் வரை பேசியதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட தவறான பரிந்துரை அமல்படுத்த முயல்வது ஏன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்த திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிரந்தரப்பணி வழங்காமல் நிலுவையில் உள்ள 24 தினக்கூலி பணியாளர்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க வலியுறுத்தியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசும் சர்க்கரை துறை ஆணையம் நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சர்க்கரை ஆலைய நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் துவங்கி வைத்தார். தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரைப் பிரிவு) திருப்பதி ஐஎன்டியுசி மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்பழகன் மற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக