ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக கட்சியினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவேரி நதிநீரை கர்நாடக அரசு திறக்க கோரியும், விளைநிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பி.ஆர். மனோகரன் தலைமை தாங்கினார் ராணிப்பேட்டை நகர செயலாளர் டி.ராஜா வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட கழக அவைத்தலைவர் காசிநாதன், மாவட்ட கழக பொருளாளர் அசோகன், மாவட்ட கழக துணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில வர்த்தக அணி செயலாளர் யூ.சந்திரன் கண்டன உரையாற்றினார் மாவட்ட முழுவதிலுமிருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக