மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டலத்துக்கான விளையாட்டுப் போட்டிகள்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டலத்துக்கான விளையாட்டுப் போட்டிகள்:

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டலத்துக்கான விளையாட்டுப் போட்டிகள்:



மதுரை காமராசர் பல்கலைக்கழக பி மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு  இடையான இறகுபந்து, மேஜைப்பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றன. 


இப்போட்டிகளை, விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி முதல்வர் முனைவர்  தி. வெங்கடேசன் துவக்கி வைத்தனர். சதுரங்க போட்டியில், தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் முதலிடமும், மதுரை கல்லூரி இரண்டாம் இடமும் மேஜைப்பந்து போட்டியில், மதுரை கல்லூரி முதல் இடமும், சரஸ்வதி நாராயணன் கல்லூரி இரண்டாம் இடமும், இறகுபந்து போட்டியில், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல் இடமும்,  சரஸ்வதி நாராயணன் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு, விவேகானந்த கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். சௌராஷ்டிரா கல்லூரி, மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், செந்தாமரைக் கல்லூரி மற்றும் மதுரை காமராஜ பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டிகளை, விவேகானந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெ.  நிரேந்தன் ஒருங்கிணைப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad