தூத்துக்குடி - பூபால்ராயர்புரம் பகுதியில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - பூபால்ராயர்புரம் பகுதியில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் பாஸ்கர் (49) என்பவருக்கும், ஓட்டப்பிடாரம் கே.சண்முகபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (33) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் பாஸ்கர் கடந்த 27.08.2023 அன்று தூத்துக்குடி மத்தியபாகம் வ.உ.சி மீன் மார்க்கெட் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்துக்குமார் பாஸ்கரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad