காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் :
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் டி.எம்.பி பவுண் டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக , இலவச கண் மருத்துவமுகாம் நடைபெற்றது. டி.எம்.பி பவுன்டேசன் நிர்வாக அதிகாரி சவுந்திரபாண்டியன் முகாமிற்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் இரத்தின பிரபு, முன்னிலை வகித்தார். காரியாபட்டி செயின் மேரிஸ் பள்ளி முதல்வர் இமாக்குலேட் முகாமினை, தொடங்கிவைத்தார்.
முகாமில், 300க்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காரியாபட்டி அருகே, நபார்டு வங்கி சார்பாக பசுமை காடுவளர்ப்பு திட்டம்:
விருதுநகர் மாவட்டம், நபார்டு வங்கி, மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக காரியாபட்டி தாலுகா, வடக்கு புளியம்பட்டி நீர்வடி மேம்பாட்டு திட்ட பகுதியில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோணுகால் ஊராட்சி மன்றத்தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் சூரியா முன்னிலை வகித்தார்.
விருதுநகர் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜாசுரேஷ்வரன் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைஃ, சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக