மதுரை அண்ணா நகர் , வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

மதுரை அண்ணா நகர் , வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

லட்சுமி ஹயக்கீரிவருக்கு, சிறப்பு பூஜைகள்:



மதுரை அண்ணா நகர், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள, லட்சுமி ஹயக்கீரிவருக்கு, திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, பக்தர்களால், பால், தயிர், இளநீர் போன்ற அபிஷே திரவியங்களால்,  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவர் அலங்கரிக்கப்பட்டு, துளசியால் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
 

இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில்,  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆவணியா அவிட்டம்: ஆவணியா அவிட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆவணியா அவிட்டத்தின் முன்னிட்டு, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி கோயில்கள் நடைபெறும். அதேபோன்று, இந்த ஆண்டும் மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினர். முன்னதாக, சிவபெருமான் மற்றும் பெருமாளுக்கு 
சிறப்பு பூஜைகள் செய்து, அதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
 


இதை அடுத்து, கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad