திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பொது மக்களுக்கு சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பொது மக்களுக்கு சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா,இ.கா.ப., (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) சென்னை அவர்கள் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., மேற்பார்வையில், காவல் துணை  கண்காணிப்பாளர் K.K.பாலச்சந்திரன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) தலைமையில் இன்று (22.08.2023)  தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்முடியனூர், வாணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொன்டமானூர், மங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடியசிப்பை ஆகிய கிராமங்களில் பொது மக்களுக்கு சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய உட்கோட்ட காவல் துணை  கண்காணிப்பாளர் திரு.S.முருகன் அவர்கள் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad