விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக, சங்க சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சங்க துணைத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் சீராளன் ,ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பணி முடித்த சத்துணவு ஊழியர்களை, அனைத்து துறை காலிப் பணியிடங்களில் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடத்த வேண்டு என்றும், ஒய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் ரூ.7650 வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக