மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி பட்டறை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தியது. இதனை முதல்வர் வானதி துவக்கி வைத்தார். துறைதலைவர் முனைவர்.கபிலா வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் முனைவர்.தினகரன் மாணவிகளுக்கு மடிப்பு நுண்ணோக்கி வரலாறு மற்றும் அதன் பயன்கள் பற்றி பேசினார். மாவட்ட தலைவர் ராஜேஷ் மாணவிகள் இதை பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யுமாறு கூறினார். பயிற்சியாளர்கள் பாண்டியராசன், காமேஷ் மற்றும் ரமேஷ் மாணவிகளிடம் இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கினர்.
விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் அன்பழகன் ஒருங்கிணைத்தார். பேராசிரியர் விஜயராணி நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக