சோழவந்தான் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இயங்கி வரும் அனைவருக்கும் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர், நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசியத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்திருந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி மைய ஆசிரியை தேவிகா ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக