மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சோழவந்தான்  சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:


சோழவந்தான் ஆகஸ்ட் .19. மதுரை மாவட்டம், சோழவந்தானில் 46 என்
ரோடு, சனீஸ்வரன் கோவில், மருது மஹால் பகுதியில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் லைட்டுகள் ஒட்ட வேண்டும் என்று, இந்தப் பகுதி பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். வேகத்தடை உள்ள இடத்தில் சுண்ணாம்பு கோடுகள் போடப்படுகின்றன. சிறிது காலத்திலேயே அது அழிந்து விடுகிறது.


 இதனால், வேகத்தடை உள்ளது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் ,
வாகனத்தை இயக்கும் போது தெரியாமல் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறையினர் மூன்று பக்கங்களிலும் வேகத்தடைகளிலும் சாலையின் ஓரங்களிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தவிர்க்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad