மதுரை மாவட்டத்தை சார்ந்த இளம் பெண்ணுக்கு முதலமைச்சர் இளைஞர் விருது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஏழுமலை கிராமத்தைச் சார்ந்த விவசாயி செல்வராஜ் இவரது மனைவி பசுபதி இவர்களுக்கு மகளாக சந்திரலேகா சிறிய வயதில் இருந்து சமூக சேவை மற்றும் உதவி புரிவது ஆகியவற்றை செய்து வந்தார். இவர் மதுரையில் உள்ள மன்னர் திருமலை கலைக் கல்லூரியில் சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார் கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு உடை மற்றும் ஆகியவற்றை தனது சொந்த செலவில் செய்து வந்தார். மேலும் முதியோர் இல்லம் மற்றும் சமூக சிந்தனையில் செயல்படும் இந்த இளம் பெண் 2500 நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார் மேலும் அவரோட லட்சியம் வருங்காலத்தில் ஆதரவற்ற இல்லம் ஆரம்பித்து அதில் அவர்களை பாதுகாத்து வருகிறது என்னுடைய நோக்கம் என்று கூறுகிறார். இவருக்கு சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் இளைஞர் விருதை தமிழக முதலமைச்சரிடம் இருந்து வாங்கினார்.
இந்த விருதை வாங்கிய சந்திரலேகாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக