இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியின் அவல நிலையை பாரீர்!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியின் அவல நிலையை பாரீர்!!!!

சோளிங்கர் ரோடு (கோமுட்டி தெரு) இந்த ரோட்டில் உடைந்த பள்ளத்திற்கு எதிரில் போஸ்ட் ஆபீஸ் உள்ளது, அதற்கு எதிரில் ஹாஸ்பிடல் உள்ளது அப்படி இருந்தும் கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பள்ளம் உள்ளது அப்படி இருந்தும் இந்த பள்ளத்தை சரி செய்ய முன்வரவில்லை வாலாஜா நகராட்சி நிர்வாகம் வாலாஜா நகராட்சியில் அதிகாரிகள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை??


இந்த தெருவின் வார்டு  உறுப்பினரும் இதனை கண்டு கொள்ளவில்லை??? இந்த சோளிங்கர் ரோட்டில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2000 முதல் 5000 பாஸ் மற்றும் லாரி மற்ற ஆட்டோ கார் இரண்டு சக்கர வாகனங்கள் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது இந்தப் பள்ளம் போக போக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது இந்தப் பள்ளத்திலிருந்து மக்கள் குடிக்கும் குடிநீர் வெளியேறிக் கொண்டே இருக்கிறது இப்படி இருந்தும் கண்டுகொள்ளவில்லை


இந்த ரோட்டில் இரவு நேரத்தில் வருபவர்கள் இதில் விழுந்து விடுகிறார்கள் இந்த வார்டு உறுப்பினராவது முயற்சி எடுத்து செய்வாரா ??என்று எதிர்பார்க்கம் இந்த வார்டு பொதுமக்கள் இந்த வாலாஜா நகராட்சியில் உள்ள (ஓவர் சி) யாவது??? உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா? ?என்று எதிர்பார்க்கும் வாலாஜா நகர சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad