வடலூர் அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதல் சம்பவ இடத்திலே 3 பேர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

வடலூர் அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதல் சம்பவ இடத்திலே 3 பேர் பலி.


குறிஞ்சிப்பாடி தாலூக்கா வடலூர் அடுத்த ஆண்டி குப்பம் பகுதியில் தனியார் பேருந்தும் காரும் இன்று மதியம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் பேருந்து நிலையிலிருந்து விருதாச்சலம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் வடலூர் அருகே ஆண்டிகுப்பம் பகுதியில் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பொழுது எதிரிலே வடலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் மீது மோதியது பின்னர் கட்டுக்பாட்டை இழந்த பேருந்து காருக்கு பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது மோதி எதிர் திசையில் சாலையோரத்தில் நின்றது இதில் இருசக்கர வாகனத்தில்  பயணித்த சாத்தப்பாடி பகுதியை சேர்ந்த ஏழப்பன் மகன் விஜயகுமார் (வயது 24) மற்றும் கோதண்டபாணி மகன் தாமரைச்செல்வன் (வயது 24) ஆகியோர் பேருந்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும் காரில் பயணித்த செஞ்சியை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி விக்டோரியா  65 வயது முதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பின்னர் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பேருந்தை தூக்கி அதற்கு அடியில் இருந்த இளைஞர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 25 க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad