வேடசந்தூர் அருகே ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தா கோஷம் விண்ணைத்தொட தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

வேடசந்தூர் அருகே ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தா கோஷம் விண்ணைத்தொட தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா 13 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படி தாரர்களின் கலை நிகழ்ச்சிகளோடு, ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், சேசன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் ஆடித்தேரோட்டம் இன்று நடந்தது. இதன் முன்னதாக காலை வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து அழகர் கோவில் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கொடிமரம் முன்பாக சுதர்சன ஹோமம், சவனத் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 


மாலை 5 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் முழங்கியவாறு பக்தி பரவசத்துடன் திருத்தேரை தேரடி வீதியில் இழுத்து வந்து பெருமாளை வழிபட்டனர். 


கொரோனா தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக 3 ஆண்டுகள் கழித்து இன்று தேரோட்டம் நடந்ததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தேர் கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பெருமாள் விசேஷ மின் அலங்கார வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


- தமிழக குரல்செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/