தூத்துக்குடி, நாசரேத் 01.08.2023 அன்று நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி, பள்ளி தலைமையாசிரியர் கென்னடி தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெயசீலன் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன், கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தமிழக அரசின் விலையில் லாமிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், கருங்குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பேரின்பராஜ், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், அலெக்ஸ் புரூட்டோ, பிச்சுவிளை சுதாகர், அருள்ராஜ் ஆசிரியர், மாரிமுத்து, செல்லத்துரை, தேவதாஸ், ஹாரிஸ் ரவி, ராமச்சந்திரன், சிலாக்கிய மணி, ஏகோவாகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக