கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அருகே நான்கு வழிச்சாலை பணி நடைபெறுவதால். நான்கு வழிச்சாலைக்காக நிரப்பப்படும் மண், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கொட்டி இருசக்கர வாகனத்தில் வருவோர் பிரேக் பிடிக்கும்போது அந்த மணலில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அருகே நான்கு வழிச்சாலை பணி நடைபெறுவதால். நான்கு வழிச்சாலைக்காக நிரப்பப்படும் மண், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கொட்டி இருசக்கர வாகனத்தில் வருவோர் பிரேக் பிடிக்கும்போது அந்த மணலில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அருகே நான்கு வழிச்சாலை பணி நடைபெறுவதால். நான்கு வழிச்சாலைக்காக நிரப்பப்படும் மண், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கொட்டி இருசக்கர வாகனத்தில் வருவோர் பிரேக் பிடிக்கும்போது அந்த மணலில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.


நாகர்கோவிலில் இருந்து வடசேரி, புத்தேரி சாலை மார்க்கமாக பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், குலசேகரம், கீரிப்பாறை போன்ற  இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.ஆனால் தற்போது புத்தேரி பகுதியில் நான்கு வழிச்சாலை பணி நடைபெறுவதால். நான்கு வழிச்சாலைக்காக நிரப்பப்படும் மண், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கொட்டி கிடப்பதால், இருசக்கர வாகனத்தில் வருவோர் பிரேக் பிடிக்கும்போது அந்த மணலில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் இந்த மண் மீது செல்லும்போது அளவுக்கு அதிகமான மண் தூசி பறந்து  அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

மண்ணில் இருந்து பறக்கும் தூசியினால் பேருந்தின் உள் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்கும், சாலையில் நடந்து செல்வோருக்கும், மற்ற வாகனங்களில் வருவோருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை, அனைவருக்கும் சுவாசக் கோளாறு ஏற்படுவது உடன், நுரையீரலும் பாதிப்படைகிறது. எனவே நான்கு வழிச்சாலை நல்லது தான், ஆனால் அதன் பணி ஏனோ தானோ என நடந்து வருவதாலும், அப்பணியை கவனிக்கும்  அதிகாரிகளின் அலட்சியத்தாலும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கஷ்டப்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் கிடக்கும் மண்ணில்  சிக்கி கீழே விழுந்து, கை கால் முறிவு ஏற்படுவதுடன்   சில சமயம் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது.


எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையில் கொட்டி கிடக்கும் மண்ணை அகற்றி, சாலை பணியின் போது மண் தூசி பறக்காமல் இருக்க அப்பகுதியில் தண்ணீர் தெளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இப்பணியின் மீது கவனம் வைத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிக விரைவில் இப்பகுதியில் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad