திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் அமைதி தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் இணைந்து போதை பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் அமைதி தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் இணைந்து போதை பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை  திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் அமைதி தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் இணைந்து போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு  பிரச்சாரம் வேடசந்தூர் விட்டல் நாயக்கன்பட்டி  நடைபெற்றது.


கூட்டத்திற்கு  அமைதி  அறக்கட்டளையின்  தலைவர் ரூப பாலன் முன்னிலை வகித்தார் .  அமைதி தொழில் பள்ளி முதல்வர் மெர்சி பால் பாஸ்கர் தலைமை வகித்தார், அமைதி அறக்கட்டளையின் மேலாளர் சீனிவாசன் போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது குறித்து  கருத்துரை ஆற்றினார். கூட்டத்தில் போதைப்பொருளால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், போதைப்பொருளினால் ஏற்படும் உடல், மன நலப் பாதிப்புகள் குறித்தும், அமைதி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பவித்ரா சிறப்புரை ஆற்றினார். 


அமைதி தொழில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தாஸ், ஜோதிமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, மணிமேகலை, திவ்யா, சசிகலா, சங்கீதா, ராஜேஸ்வரி ரேணுகா, முத்தமிழ் செல்வி, புவனேஸ்வரி ஆகியோர்கள் கலந்து கருத்துரை வழங்கினார்கள், மேலும் தன்னார்வலர்கள், போதை பொருள் எனக்கு வேண்டாம் என்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில்  270 கிராமங்களில் தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad