தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல்படி கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ் ஆவுடையப்பன் இன்று மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்படுத்தினார்.



கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.  'நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றுகொண்டனர்.


முன்னதாக 09.08.2023 அன்று கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் துணை கண்கானிப்பாளர் கோடிலிங்கம், திருவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்படுத்தினர்.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad