கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் கொள்ளிடத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்.. மா. புளியங்குடி கிராம பகுதியில் தடுப்பணை கட்டிட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமைதிப் போராட்டத்தில் கோரிக்கை.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.புளியங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் தில்லைநாயகபுரம் பகுதியில உள்ள ஆழ்துளை கிணறு அருகே அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள்அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் மற்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு அடைந்து தண்ணீர் உப்பு நீராக மாறிவிட்டது.இதனால் விவசாயம் செய்ய முடியாததால் இப்பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவும் அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. மா. புளியங்குடி பகுதியில் தடுப்பணை அமைத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்று ஒரு மனதாக தெரிவித்தனர். நமது கோரிக்கையை வலுவாக ஆட்சியாளருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பணை கட்டுவதற்கான தீர்மானத்தை வருகின்ற ஆகஸ்ட் 15 சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர 50க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அதை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்ப வேண்டும் என்றும் மேலும் இந்த அமைதிப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைத்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் அரசியல் கட்சி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து நாம் அனைவரும் தடுப்பணைக்காக போராடி நமக்கான தீர்வினை எட்ட வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கடலூர் மாவட்டம் மா.ஆதனூர் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கொண்டுவரப்பட்ட தடுப்பணைப் பணிகள் இன்னும் பத்து சதவீதப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அதற்கு இன்னும் தேவைப்படும் கூடுதல் நிதியையும் அரசு ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த தடுப்பணையால் இப்பகுதியில் 100 க்கும்மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் இரண்டு மாவட்டங்களிலும் பயனடைவார்கள். அதே போன்று தற்போது கடலூர் மாவட்டம் மா. புளியங்குடி, மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி இடையே தடுப்பணை கட்டி இப்பகுதி மக்களை காப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெ டுத்தனர்.
மா.புளியங்குடி கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் தடுப்பணை உடனே அமைத்து தந்து விட்டு பிறகு கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்களை கிராம மக்களும் விவசாயிகளும் நிறைவேற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக