சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர மறுக்கும் கிராம நிர்வாகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர மறுக்கும் கிராம நிர்வாகம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கல்குறிச்சி ஊராட்சி ஆலங்குளம் கிராம பஞ்சாயத்தில் விநாயகர் கோயில் அருகில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தண்ணீர் கீழே வடிந்து வீணாகி வருகிறது. 


மேலும் 4 முதல் 5 குழாய்களில் ஒரே ஒரு குழாயில் மட்டுமே தண்ணீர் வரும் அதையும் சரியாக பராமரிக்க தவறியதால் மரக்குச்சியில் துணியை சுற்றி குளாயில் குத்தி தண்ணீர் வடியாமல் நிறுத்தும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மீதமுள்ள குழாய்களில் தண்ணீர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது, அதையும் மீறி குழாய்களில் இருந்து நாள் முழுக்க தண்ணீர் கீழே வடிந்து வீணாகி வருகிறது. 


இது பற்றி கிராம பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இதுவரை காலம் தாழ்த்தியும் அலைக்கழித்து வருகிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் கிராம பொதுமக்கள். 


மேலும் கிராம பொதுமக்கள் கூறுகையில் இந்த தண்ணீர் பிரச்சனை மட்டுமின்றி எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கிராம நிர்வாகம் முன்னெடுப்பதில்லை, எந்த ஒரு வசதி திட்டங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தியும் கொடுப்பதில்லை, எடுத்துக்காட்டாக பள்ளிக்கூட சத்துணவு கூடம் மேம்பாட்டு வசதியாகட்டும், சாலை வசதியாகட்டும், கழிவு நீர் வசதியாகட்டும், கட்டிட பராமத்து பணியாகட்டும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இது பற்றி புகார் அளித்தால் தங்களை ஒரு பொருட்டாகவே யாரும் பார்ப்பதில்லை, என்ன புகார் அளிக்க வருகிறோம் என்றும் காது கொடுத்து யாரும் கேட்பதில்லை என்று மிகுந்த மன வேதனையுடன் சரமாரியாக கிராம நிர்வாகத்தின் மீது தங்களின் விமர்சனங்களை ஒவ்வொன்றாக அடுக்குகின்றனர். 


கிராம நிர்வாகத்தின் மூலம் தாங்கள் பல இன்னல்களுக்கு உள்ளாக உள்ளாகி வருவதாகவும் இதே போன்ற அவல நிலை மேலும் தொடர்ந்தால் வேறு வழி இன்றி சாலை மறியலிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad