மேலும் இன்று காலை 7:30 மணி அளவில் விஷப்பூச்சி கடித்து சிகிச்சைக்காக சென்ற நோயாளி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு பணியில் தூய்மை பணியாளர் மட்டுமே இருந்த காரணத்தால் நோய் திருப்பி அனுப்பப்பட்டார், அலட்சியபோக்கில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் செவிலியர்கள் வரும் வரை காத்திருக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதும் இல்லை, இரவு நேரங்களில் இங்கு பணியாற்ற எந்த ஒரு செவிலியரும் பணியில் இருப்பதில்லை இரவு 10 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை வெளியிலே காக்க வைத்து அனுப்பி விடுகின்றனர், அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள் காலையில் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்வதற்காக வருகின்றனர்.
இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் அவர்கள் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறைகள், குடிதண்ணீர் போன்றவை இங்கு இல்லை, இதனால் முகாமிற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் வரும்பொழுது வாட்டர் கேனில் தண்ணீர் கொண்டு வந்து அவர்களின் தாகத்தை தீர்த்துக் கொள்கின்ற அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, அது மட்டுமில்லாமல் போதிய மின்விளக்குகள் வசதி இல்லாமலும் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையிலும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
எப்போது வேணாலும் மேற்கூரை கீழே விழும் நிலையிலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படும் கட்டிடமும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, இதனை கண்டு கொள்வாரா மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர்?.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக