ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த அறப்போராட்டத்தில் மது பாட்டில், கஞ்சா, ஹான்ஸ், போதை சாக்லெட், போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காட்டன், 3 நம்பர் சீட்டு, விபச்சாரம், நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு துணை போகும் காவல்துறையினரை கண்டித்தும் அறப்போராட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சரவணன் பேசுகையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களால் பல தாய்மார்கள், இளைஞர்கள், வாழ்க்கை கேள்வி குறியாகியிருக்கிறது, இது போன்ற சமூக விரோத செயல்களை காவல்துறை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர,ஒன்றிய, கிளைக் கழகபொறுப்பாளர்கள் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக