விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திமிரி பேரூர் செயற்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திமிரி பேரூர் செயற்குழு கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் திமிரி பேரூர் செயற்குழு கூட்டம் பேரூர் செயலாளர் இரா.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


இந்த செயற்குழு  கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு என்கிற பிரபாகரன், தொகுதி செயலாளர் சின்னையன், ஆவன பாதுகாப்பு மாநில பொறுப்பாளர் மாம்பாக்கம் பாபு ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மாவட்டச் செயலாளர் பிரபு பேசுகையில் பேரூராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர்களை சேர்த்து கிளையை கட்டமைத்து வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தலைவர் தொல். திருமாவளவனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பேரூராட்சி வார்டுகளிலும் கொடியேற்ற  வேண்டுமென்று கேட்டுக் கொண்டார், எந்த நேரத்திலும் என்னை அழைத்தாலும் உங்களோடு இணைந்து கட்சி பணி செய்யவும் உதவி செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad