வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் .

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் .



வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளின் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர்  மு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார் .இதில் வேளாண்மை துறை அலுவலர் உமா சங்கர் குடியாத்தம் வனத்துறை அலுவலர் வினோபா பேர்ணாம்பட்டு வனத்துறை வனவர் சரவணன் நகராட்சி துறை பிரபுதாஸ் வட்ட வழங்கல் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் சமூக பாதுகாப்பு திட்டம் பிரகாசம் மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 22.08.23.விவசாயிகள் குறைதீர்வு  கூட்டம் நடைபெற்றது.
01.இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ் மாநில விவசாய சங்க தலைவர் துரை செல்வம் பேசியது.


பல எதிர்பார்ப்புக்கு  மத்தியில் விவசாயிகள் மனு அளிக்கிறார்கள்.
ஆனால் துறை அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை.அதை உறுதி செய்ய வேண்டும்.


02.வடகிழக்கு பருவ மழை ஆரம்பிக்கும் நிலையில் மோர்தான அணையும் நிரம்பிய நிலையில் அணையின் இருபுற கால்வாய்கள் தூர்வார வேண்டும்.பெரிய ஏரியின் கரைகள் உறுதி தன்மையை தாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


03.கௌண்டன்ய ஆற்றில் சுடுகாடு பக்கத்தில் எந்திரங்கள் கொண்டு டிப்பர் லாரி மூலம் மண் அள்ளப் படுகிறது. இது எங்கு செல்கிறது. இலவசமாக எடுத்து செல்கிறதா.அ..விற்கபடுகிறதா என்ன விலைக்கு விற்கப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடக்கிறதா இல்லை முறையாக நடக்கிறதா என்பதை தாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்


04.மின் துறையில் பெயர் மாற்றம் செய்ய ரூ.721./-மட்டும் கட்ட வேண்டும் என்ற உத்தரவை மீறி ரூபாய் 1250./-வசூல் செய்கிறார்கள்.
இதனை உயர்மட்ட அதிகாரிகள் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


05.இந்திரா நகர் வழியாக முப்பது கண்மாய் கீழே ஆலம் பட்டறை கிராமத்திற்கு வழி செல்கிறது.ஆற்றின் பக்கவாட்டில் கரைகள் மழையில் அடித்து சென்றுவிட்டது.தற்பொழுது இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டும்  இக்கட்டான நிலையில் செல்கிறது.போர்கால அடிப்படையில் கட்டித்தரவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு பேசினார்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad