கடலூர் மாவட்டத்தில் என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டதால் பழைய பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாத நிலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டதால் பழைய பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாத நிலை.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில்  தண்ணீர் திறந்துவிட்டதால் பழைய பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாத நிலை.



கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் விவசாயிகள்,கிராம பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி விளை நிலங்களை, நெற்பயிர்களை அழித்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் கத்தாழை கிராமப் பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட்ட பின்பு என்எல்சி நிர்வாகம் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றி தேக்கிவைக்கப்பட்டிருந்த தண்ணீரை புதிய பரவனாறு வாய்க்காலில் திறந்தது. இதன் மூலம் பழைய பரவனாறு வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வந்த விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இனி தொடர முடியுமா என்று  வேதனையடைந்துள்ளனர். ஏனெனில் கத்தாழை, கரைமேடு, மும்முடி சோழகன், கரிவெட்டி, மற்றும் பல்வேறு கிராமங்களின் வழியாக செல்லும் பழைய பரவனாறு வாய்க்காலில் என்எல்சியின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அந்த தண்ணீரை விவசாயிகள் மோட்டார் வைத்து எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது புதிய பரவனாறு வாய்க்காலில் அந்த தண்ணீர் திருப்பிவிடப்பட்டதால் பழைய பரவனாறு மூலம் பாசனம் பெற்று வந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காதநிலை உள்ளதால் எவ்விதமான பயிர் விவசாயமும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதால் இனிஎப்படிபயிர் செய்வது என்ற கலக்கத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad