புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நெடும்புலி கிராமத்தில் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நெடும்புலி கிராமத்தில் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு.


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நெடும்புலி கிராமத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் 
வர்த்தகத்துறை அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 


இதில் மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் எஸ்.தேவஇரக்கம், இராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், பெருமாள், ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad