தமிழக அரசின் விருது பெற்று மலை மாவட்டதிற்கு பெருமை சேர்த்த சமுக சேவகர் தஸ்தகீர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்.
சமூகப் பணியில் சாதனை படைத்து பல்வேறுவிருதுகளை வென்ற சிறப்பான சமுக ஆர்வலரும் அப்துல்கலாம் அறக்கட்டளை நிர்வாகியுமான தஸ்தகீர் மாநில அளவிலான விருது பெற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவைக்காக இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருகரங்களால் சென்னையில் நடந்த வண்ணமிகு சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது..
தமிழக அரசின் விருதுபெற்ற தஸ்தகீர் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திராவிட கழக தலைவர் வீரமணி அவர்களிடமும் வாழ்த்து பெற்றார்
விருது பெற்ற தஸ்தகீருக்கு சமுக ஆர்வலர்கள், நண்பர்கள், பொது மக்கள் தங்களின் நல்வாழ்துக்களை தெரிவித்தனர்.
இன்று தமிழக அரசின் விருது பெற்று மலை மாவட்டதிற்கு பெருமை சேர்த்த சமுக சேவகர் தஸ்தகீர் மாவட்டஆட்சியர் அமிரித் அவரகளிடம் வாழ்த்து பெற்றார்.
இந்த விருதை பெற்று மலை மாவட்டத்திற்கும் மலைகளின் அரசிக்கு மேலும் ஒரு மணிமகுடத்தை பெற்ற தந்த சமுக சேவகர் தஸ்தகீர் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் இவர் கடந்த ஆண்டு நமது தமிழக குரல் பெருமையுடன் வழங்கிய தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது நீலகிரி மாவட்டத்தின் சார்பாக இவருக்கு விருது வழங்கியதில் பெருமை கொள்கிறது தமிழக குரல் இணையதள செய்தி குழுமம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக