ராணிப்பேட்டை மாவட்டம் பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் ராணிப்பேட்டை பேராயம் சார்பில் சட்டத்துறை பிரிவிற்கான நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சி ராணிப்பேட்டை காரைப் பகுதியிலுள்ள போதகர் நிர்மல் திருச்சபையில் நடைபெற்றது.
இத்தநிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் Rev. K. நிர்மல் தலைமை தாங்கினார், Rev. J.ஜோஸ்வா தமிழ்நாடு சட்டத்துறை தலைவர் அத்துரைக்கான ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளாக Rev. எட்வின் தாஸ் என்பவரை தலைவராகவும், Rev. தாமஸ் சதாசிவம் துணைத் தலைவராகவும், Rev. பிரபாகரன் செயலாளராகவும், Rev. கில்லிவளவன் இணைச்செயலாளர்களாகவும், Rev. P. ரவி பொருளாளராகவும், Rev.அன்பு, Rev. ஜேம்ஸ் வெங்கடேசன் ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகவும் மாவட்ட வழக்கறிஞராக யுவராஜ் என்பவரையும் நியமனம் செய்து வைத்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக