சிவகங்கை மன்னர் துரைசிங்கம் உருவ சிலை அவமதிப்பு; கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அதிருப்தி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் உருவ சிலை அவமதிப்பு; கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அதிருப்தி.

சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பவள விழா இன்று நிறைவடைந்தது. இதில் மன்னர் துரைசிங்கம் அவர்களை அவமதிப்பிற்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், நாங்கள் இக்கல்லூரியில் பயின்று இன்று தனியார் மற்றும் அரசு துறைகளில் உயர் பதவிகளில் அதிகார பொறுப்புகளில் உள்ளோம், இக்கல்லூரிக்கு என்று மிகப்பெரிய தனித்துவமான பாரம்பரிய வரலாறும் பெருமையும் உள்ளது.


மன்னர் துரைசிங்கம் அவர்கள் இல்லாமல் இந்த கல்லூரி இன்று பவள விழா காணமுடியாது, மன்னர் துரைசிங்கம் இல்லாமல் இக்கல்லூரி இல்லை இக் கல்லூரி இல்லாமல் நாங்களும் எங்களைப் போன்ற இளைஞர்களும் இல்லை, அவருக்கென்று செய்ய வேண்டிய மரியாதைக்கு நாங்களும் கல்லூரி நிர்வாகமும் முழு பொறுப்பும் கடமையும் பொற்றவர்கள். மன்னர் துரைசிங்கம் அவர்களின் உருவ சிலையை அவமதிக்கும் வண்ணமாக கல்லூரியில் பணிபுரியும் காவலாளி நிர்வாகத்தின் சார்பில் மாலையை கொடுத்து அணிவிக்க கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற அடிப்படையில் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது இது வன்மையாக கண்டிக்கத்தக்க, எனவே எங்களுடைய கடும் கண்டனங்களை கல்லூரி நிர்வாகத்தினருக்கு பதிவு செய்து கொள்கிறோம்.


அரசு விழாவாக கொண்டாடப்படும் இந்தப் இப்பிரம்மாண்ட பவள விழாவில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை அதிகாரிகள் என்று கலந்து கொள்ளும் விழாவில் அனைவருடைய புகைப்படங்களும் இடம் பெற்றிருந்த நிலையில் எந்த ஒரு பதாகைகள் பிளக்ஸ் பேனர்கள் முதலானவற்றில் பெயரளவில் கூட மன்னர் துரைசிங்கம் அவர்களின் படம் பொறிக்கப்படவில்லை என்றும் இக்கல்லூரியில் பயின்று இன்று மிகப்பெரிய அதிகார பொருப்புக்களில் உள்ள கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையாக குற்றம் சாட்டினர். 


ஆகவே மன்னர் துரைசிங்கம் அவமதித்த கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதோடு தக்க விளக்கம் அளிக்கவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad