சிவகங்கை மாவட்டம் நீட் தேர்வை நீக்கும் மசோதாவிற்கு கையெழுத்திட மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே. ஆர். பெரிய கருப்பன் அவர்களின் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை திமுக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை என்று தனக்கே உரித்த பாணியில் பிஜேபி அரசையும் ஆளுநரையும் எச்சரித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறுதியாக பேசிய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டிய தமிழக மாணவ, மாணவிகளை மரணத்தை நோக்கி தள்ளி உள்ளது ஒன்றிய சர்வாதிகார பிஜேபி அரசும் அதன் ஏவலாளியுமான ஆளுநர் ஆர். என். ரவியும் என்று கடுமையாக சாடினார்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதற்கு முழு தார்மீக பொறுப்பும் ஆளுநரையே சாரும் என்று விமர்சித்ததோடு தமிழக மாணவ மாணவிகளின் கல்வி உரிமையை காத்து அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜனநாயகத்தை நிலை நாட்ட உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசையும் தமிழக ஆளுநரையும் வலியுறுத்தினார்.
மேலும் தற்போதைய அவல நிலை நீடிக்குமேயானால் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை மாணவ மாணவிகளின் நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்ற எச்சரித்ததோடு தன் நிறைவு உரையை முடித்துக் கொண்டார்.
இந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், மாநில மாணவரணி துணைச் செயலாளர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர், நகர் பேரூர் ஒன்றிய தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக