ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை அடுத்த சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்தவர் மீரா தயாளன் இவர் சிறுபான்மை மக்கள் நல கட்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவியாக செயல்பட்டு வருகிறார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தார் அந்த மனதில் கூறியிருப்பதாவது, நான் வசித்து வரும் இராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.10 சீனிவாசன்பேட்டையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 40 ஆண்டு காலமாக மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறோம்.
எங்கள் பகுதிக்கும் மாந்தாங்கல் பகுதிக்கும் சுமார் 1/1/2 கி.மீ. தூரம் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள், வயதானவர்கள் கடைக்கு சென்று மணி கணக்கில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கும் அவல நிலை உள்ளது. பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு வரஇயவில்லை. மழை காலங்களில் பொருட்களை வாங்கி வரும்பொழுது கீழே விழுந்து விடுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி எங்கள் கிராமத்திலேயே ரேஷன் பொருட்களை வழங்க ஆவன செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக