திருப்பத்தூரில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் செங்கோல் ஏந்தி ஊர்வலம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூரில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் செங்கோல் ஏந்தி ஊர்வலம்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக செங்கோல் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர், நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர் பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்திபன் வரவேற்றார். மேலும், இந்த செங்கோலானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டு ஜனவரி மாதம் டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad