திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் துயரை துடைக்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் துயரை துடைக்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு!

மாற்றுத்திறனாளிகளின் துயரை துடைக்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு! பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கால்களை இழந்த மாற்று திறனாளிகளுக்கு அவர்களின் சிரமம் இல்லா போக்குவரத்திற்கு உதவும் விதமாக இணைப்பு சக்கரம் பொருத்திய புதிய பெட்ரோல் வாகனங்களை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார், திமுக பகுதி செயலாளர்கள் மியாமி ஐயப்பன் , மு.க. உசேன். வட்ட செயலாளர் மு. நந்தகோபால் , ஆதவன் முருகேசன் , மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ. தங்கராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ம. சூர்யா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad