கோவை மாவட்டம் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 38 வயது இவரது தந்தை 68 வயதான திருமூர்த்தி தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அன்று திருமூர்த்தி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தன்னுடைய தந்தையை தேடி பல இடங்களில் பார்த்துள்ளார் எங்கு சென்றார் என தெரியவில்லை என்பதால் நேற்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக