மதுரை - சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

மதுரை - சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு - போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவதாக டிஎஸ்பி தகவல்


நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு  ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதன்காரணமாக மதுரை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை ரயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும்  இருப்புப்பாதை காவல்துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் , ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


இதில் பயணிகள் கொண்டு வந்துள்ள உடைமைகள், ரயில் நிலையங்கள் முழுவதும் அனைத்து பகுதிகள், ரயில்களில் ஏறியும் ரயில் பெட்டிகளில் சோதனைகள் மேற்கொண்ட ரயில்வே இருப்பு பாதை துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி பயணிகளிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad