வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (வயது 16) அருண் ஹரி பாலாஜி (வயது 16 ) ஆகிய இருவரும் குடியாத்தம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகின்றனர் .
இதனிடையே இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு தனியார் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மதியம் துளசிதாஸ் மற்றும் அருண் ஹரி பாலாஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லிங்குன்றம் பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நெள்ளூர் பேட்டை ஏரிக்கரை அருகே எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க சாலையோரம் இருசக்கர வாகனத்தை திருப்பிய போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அங்கிருந்து அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் துளசிதாஸ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அருண் ஹரி பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் உடலும் உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக