அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திடும் வகையிலும் விலையில்லா நோட்டு புத்தகங்கள், விலையில்லா சீருடைகள், இலவச பேருந்து பயண அட்டை போன்ற எண்ணற்ற திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு
மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10,679 மாணவியர்களுக்கு 8,386 மாணவர்களுக்கும் என மொத்தமாக 19,065 மாணவர்களுக்கு 116 அரசு பள்ளிகளின் வாயிலாகவும், 30 அரசு நிதி பெறும் பள்ளிகளின் வாயிலாகவும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு 229 மிதிவண்டிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி, ஊராட்சி குறிஞ்சிப்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட விருப்பாட்சி அரங்கமங்களம், பெத்தநாயக்கன்குப்பம், தியாகவல்லி, தொண்டமாநத்தம், பூவாணிக்குப்பம், கிருஷ்ணங்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் (TATA ACE) வாகனத்தை வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்கு 16 புதிய ஜீப் வாகனங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வரும்
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் மின்கல வாகனத்தை (Batterycar) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக