மதுரை மாநகராட்சி தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை,
மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு,
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் (09.08.2023) வழங்கினார்.
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 986 மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக , பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி 112 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மேயர் வழங்கினார். இப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, மேயர், பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, கல்விக்குழு தலைவர் இரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் வி.சுதன், எஸ்.எஸ்.போஸ், டி.அமுதா தலைமை ஆசிரியர் மீனாட்சி ஆசிரியர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக