சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இன்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியில் இருக்கும் 3700 மாணவர்களும் பேராசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி இந்தியாவின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்றும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் அரசியலமைப்பு சட்ட வழிகளைப் பின்பற்றி சட்டரீதியாக தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக