தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர் பாபுவிடம் தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர் பாபுவிடம் தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை!

சிதம்பரத்தில் செப்டம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு விடம் தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்ததுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினரும் தெய்வீக பக்தர்களின் பேரவை நிறுவனரும் தலைவருமான  ஜெமினி எம்.என் ராதா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு விடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வருகிற செப்டம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள புகழ்பெற்ற தில்லை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில்  அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள்  பங்கேற்கின்றனர்.


மேலும், கும்பாபிஷேக விழாவுக்கு சுமாா் 50 ஆயிரம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாக்கப்படுகிறது. இதனால், நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. கும்பாபிஷேக தேதி அன்று மாணவா்கள் பள்ளிக்கு வந்து செல்வது சிரமமாக இருக்கும். என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்க வேண்டும்.


தில்லை அம்மன் கோவில் அருகே அவசர சிகிச்சை முதலுதவி மையம் குடிநீர் வசதி தற்காலிக கழிவறை உள்ளிட்ட  வசதிகளை செய்துதர   வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளாா். அமைச்சரை சந்தித்தபோது  கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் தெய்வீக பக்தர்கள் பேரவை துணைத் தலைவருமான ஆர். சம்மந்தமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஸ்டீபன் முத்துப்பாண்டி ஆர்.டி.ஐ.துறை மாவட்ட துணைத் தலைவர் ரகோத்தம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மனுவின் நகைகளை கடலூர் மாவட்டம் ஆட்சி தலைவர் அ. அருண் தம்புராஜ்க்கு  அனுப்பி உள்ளனர்.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad