சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இளையான்குடி ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இளையான்குடி ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இளையான்குடி ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ். காரைக்குடி ஊராட்சிக்குட்பட்ட வடக்குசந்தனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 11.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.



அதேபோல் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ். காரைக்குடி ஊராட்சிக்குட்பட்ட எஸ். காரைக்குடி கிராமத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய். 10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.



பின்னர் அதே எஸ். காரைக்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றியம் செயலாளர் திரு. சுப. மதியரசன், எஸ். காரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு. குழந்தை பாண்டியன், கிளை செயலாளர் திரு சடைமுனியன், திரு திருப்பதி, திரு திருமுருகன், அவை தலைவர் திரு பாண்டியன், ஒன்றிய பிரிதிநிதி திரு கே. தினேஷ், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு தேசிங்கு ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு புவியரசு, கட்சி நிர்வாகிகளான திரு காளிமுத்து, திரு கருணாகரன், திரு சிவநேசன், திரு ராஜபாண்டி, திரு கண்ணன், திரு அழகேசன், திரு அழகுப்பாண்டி, திருப்புவனம் திரு முருகன் மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ செல்வங்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/