செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக்கில் அரசு தட்டச்சு தேர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக்கில் அரசு தட்டச்சு தேர்வு.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1360 பேர் பங்கேற்றனர். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல் துறை சார்பில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1360 பேர் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் 5 பிரிவாக 829 பேருக்கும், சீனியர் பிரிவில் 4 பிரிவாக 531 பேருக்கும் தேர்வு நடந்தது. 


சென்ற வாரம் சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 72 மாணவ மாணவியர் 6 பிரிவுகளாக தேர்வு எழுதினர். தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் டாக்டர் ஆவுடையப்பன் பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளர்களாக துறைத்தலைவர்கள் பென் மேத்யூ மற்றும் ஆறுமுக சேகர் பணியாற்றினர்.


தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி விரிவுரையாளர்கள் சந்திரசேகர், ஜான் செண்பகத்துறை, கண்ணன், நாகராஜா, சின்ன ராஜா, அனுலா ஜானகி, கனிமொழி, சீனிவாசன், சிவசுப்பிரமணியன், பீட்டர் ஒப்பாலின், ராஜா ஹைதர் அலி, காந்தி, சுஷ்மிதா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கல்யாணி, ஆறுமுகம், ஆனந்தவல்லி, மாரியப்பன், குமார், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன்nதலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad