மதுரையில் அதிமுக மாநாடு தொடங்கியது: தொண்டர்கள் உற்சாகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

மதுரையில் அதிமுக மாநாடு தொடங்கியது: தொண்டர்கள் உற்சாகம்.

மதுரையில் அதிமுக சார்பில், மாநாடு தொடங்கியது, மதுரை அவனியாபுரம் அருகே அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலை முதலே, வேன் கார் ஆகிவற்றில் வரத் தொடங்கினர்.


அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே. பழனிச்சாமி, மதுரைக்கு வருகை தந்தார். அவர், மதுரையை நடைபெறுகின்ற அதிமுக மாநாட்டு பந்தலில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்பொழுது ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி வாழ்க என, கோஷமிட்டனர். முன்னதாக, அதிமுக மாநாடு பந்தலில் பல்வேறு மாவட்டங்களில் வந்த அதிமுக தொண்டர்களால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இம்மாநாட்டில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், முனுசாமி, தங்கமணி, வேலுமணி, அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி, செல்லூர் ராஜு ,ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


அதிமுக மாநாட்டை ஒட்டி, மதுரை நகர போலீசார் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், மதுரை நகரில் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலை முக்கிய வீதிகளில் சட்ட ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து பணிகளை கவனித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad